உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி

 மின்சாரம் தாக்கி ஊர்க்காவல் படை வீரர் பலி

போடி: போடி அருகே கரட்டுப்பட்டியில் வசிப்பவர் தினேஷ் குமார் 32.இவர் ஊர்க்காவல் படை வீரராக பணியாற்றி வந்தார். இவரது வீட்டின் அருகே புதிதாக வீடு கட்டி முடிக்கப்பட்டு நவ. 23ல் புதுமனை புகுவிழா நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளார். நேற்று புதிய வீட்டின் முன்பாக இருந்த மின் மீட்டர் பெட்டியை சுத்தம் செய்து உள்ளார். மின்சாரம் தாக்கி தினேஷ்குமார் கீழே விழுந்துள்ளார். அவரை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், தினேஷ்குமார் இறந்து விட்டதாக கூறி உள்ளார்.தினேஷ்குமார் தந்தை வீராச்சாமி புகாரில் போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ