சபரிமலை செல்ல ஒரு வழிப்பாதை அமல்
கம்பம்:சபரிமலை பக்தர்கள் கம்பமெட்டு சென்றபின் சபரிமலை செல்ல பல பாதைகள் உள்ளன. அதில் எந்தெந்த பாதைகள் வழியாக செல்லலாம் என்று கேரள போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சபரிமலைக்கு பெரும்பாலான பக்தர்கள் தேனி, கம்பம், குமுளி வழியாக செல்வது வழக்கம். குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பல ஆண்டுகளுக்கு முன்பே ஒருவழிப்பாதை திட்டம் அமல்படுத்தப்பட்டது.கோயிலிற்கு செல்லும் வாகனங்கள் கம்பத்திலிருந்து கம்பமெட்டு, சேத்து குழி, ஆமையாறு, புளியன் மலை, கட்டப்பனை, ஏலப்பாறை, குட்டிக்கானம், எருமேலி வழியாக கோயிலிற்கு செல்வர்.இந்தாண்டும் ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்பட்டு வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. ஆனால் கம்பமெட்டை கடந்த பின் பல பாதைகள் இருப்பதால் எதில் செல்வது என தெரியாமல் பக்தர்கள் குழம்புகின்றனர்.இது குறித்து கேரள போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது :கம்பமெட்டிலிருந்து அந்நியார் தொழு வழியாக புளியன் மலை சென்று , பின் கட்டப்பனை, ஏலப்பாறை, குட்டிக்கானம் எருமேலி செல்லலாம். ஆனால் அந்நியார் தொழு ரோட்டில், பல ரோடுகள் பல இடங்களில் பிரியும். எனவே அந்த ரோட்டை தவிர்த்து விடுவது நல்லது.கம்பமெட்டு, சேத்துகுழி, ஆமையாறு, புளியன் மலை கட்டப்பனை, ஏலப்பாறை வழியாக செல்வது நல்லது. அல்லது கம்பமெட்டு, சேத்துகுழி, ஆமையாறு, புத்தடி, செல்லிமடை பின் குமுளி சென்று வழக்கம்போல வண்டிப் பெரியாறு, பீர்மேடு, குட்டிக்கானம், எருமேலி செல்லலாம் என்றனர்.கம்பமெட்டு ரோட்டில் செல்லும் கம்பமெட்டில் இருந்து எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை விளக்கும் பாதை வரைபடம் பிரிண்ட் செய்து, துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்ய தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.