உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இடுக்கியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

இடுக்கியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விடுமுறையில் சுற்றுலா துறைக்குச் சொந்தமான சுற்றுலா பகுதிகளை இரண்டு லட்சம் பயணிகள் ரசித்தனர்.மாவட்டத்தில் மூணாறு, வாகமண் உள்பட பல்வேறு பகுதிகளில் மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி கழகத்திற்கு சொந்தமான சுற்றுலா பகுதிகள் உள்ளன. அவற்றில் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு ஆகிய விடுமுறையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக டிச.23 முதல் ஜன. ஒன்று வரை பயணிகள் வருகை அதிகரித்தது. அந்த கால அளவில் மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி கழகத்திற்குச் சொந்தமான சுற்றுலா பகுதிகளை மட்டும் 2,03, 430 பயணிகள் ரசித்தனர். அதில் மிகவும் கூடுதலாக வாகமண்ணுக்கு சென்ற பயணிகள் அங்குள்ள மலைகுன்றுக்கு 63, 211 பேரும், அட்வஞ்சர் பூங்காவுக்கு 55,889 பேரும் சென்றனர். அங்கு இந்தியாவில் மிகவும் நீளமான கண்ணாடி நடை பாலம் செப்.6ல் பயன்பாட்டிற்கு வந்தது. அதன் பிறகு வாகமண்ணுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் கண்ணாடி நடை பாலத்தை 9,801 பயணிகள் ரசித்தனர்.கடந்தாண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கையை விட இந்தாண்டு அதிகரித்தது என மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி கழகம் செயலர் நிதீஷ்ஜோஸ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்