உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஐயப்ப பக்தர்கள் செல்லும் வனப்பாதையில் ஆய்வு

 ஐயப்ப பக்தர்கள் செல்லும் வனப்பாதையில் ஆய்வு

கூடலுார்: சபரிமலை மண்டல கால பூஜை நாளை துவங்க உள்ள நிலையில் சத்திரம், புல்மேடு வனப்பாதையில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இடுக்கி சப் கலெக்டர் ஷைஜு ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார். சபரிமலை மண்டல காலத்தையொட்டி பாரம்பரிய வனப் பாதையான வண்டிப்பெரியாறிலிருந்து சத்திரம், புல்மேடு வனப்பாதையில் ஐயப்ப பக்தர்கள் அதிகம் நடந்து செல்வார்கள். இதில் சமீபத்தில் வனத்துறையினர் சீரமைப்பு பணியை செய்தனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை இடுக்கி சப் கலெக்டர் ஷைஜு ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டார். அனைத்து துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். சீதக்குளம், புல்மேடு, உப்புபாறை ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. புல்மேட்டில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உணவு விடுதி, சுகாதாரத் துறைக்கான கொட்டகைகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கான கொட்டகை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட் டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ