உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  உலக பழங்குடியினர் தினம் அனுசரிப்பு

 உலக பழங்குடியினர் தினம் அனுசரிப்பு

சின்னமனூர்: காமாட்சிபுரம் அறிவியல் மையத்தில் உலக பழங்குடியினர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைவர் பச்சமால் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். போடி அருகே உள்ள சிறைக் காடு, ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர்வேல்புரம், வேலப்பர் கோயில் , கடமலைக்குண்டு பகுதி கரட்டுப்பட்டி, சின்னமனூர் கரடு பகுதிகளுக்கு சென்று பழங்குடிகளை சந்தித்து கலந்துரையாடல் நடந்தது. சமூக பொருளாதார வளர்ச்சி, கல்வி மற்றும் திறன் வளர்ச்சி, ஆரோக்கியம், புவிசார் குறியீடு கைவினைப் பொருட்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய கலந்துரையாடல்கள் நடந்தன. நிகழ்ச்சிகளை அறிவியல் மைய தொழில்நுட்பர்கள் ரம்யா சிவ செல்வி, அருண்ராஜ், சபரிநாதன், ராஜாராமன், கார்த்திக் பாண்டி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ