உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

தேனி : தேனி நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியின் மேலாண்மைத்துறை சார்பில், 'வணிக நிர்வாகத்தில் வாய்ப்புகள், சவால்கள்' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர்.செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், , கல்லுாரி முதல்வர் சித்ரா, துணை முதல்வர்கள் கோமதி, சரண்யா, உமா, கிருஷ்ணவேணி, சுசிலா பேசினர். துபாய் அமிட்டி யுனிவர்சிட்டி எம்.பி.ஏ., இ.எம்.பி.ஏ., அமிட்டி பிசினஸ் ஸ்கூல் தலைவர் கமலாதேவி, ஈரோடு கொங்கு பொறியியல் கல்லுாரி இணைப் பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி,அன்னை தெரசா பல்கலை உதவிப் பேராசிரியர் ஹென்னா ஷரோன், மதுரை காமராஜ் பல்கலை தொலைதுாரக் கல்வி இயக்க உதவிப் பேராசிரியர் மேகராஜன் ஆகியோர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ