உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளா பொது கல்வித்துறையில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது நீர்வளத்துறை அமைச்சர் பெருமிதம்

கேரளா பொது கல்வித்துறையில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது நீர்வளத்துறை அமைச்சர் பெருமிதம்

மூணாறு: ''கேரள மாநிலம் பொது கல்வித் துறையில் பொறாமைப் படத்தக்க விதத்திலும், பெருமைக்குரிய வகையிலும் பெரும் வளர்ச்சி அடைந்து சாதனையை ஏற்படுத்தியுள்ளது.'' என, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் தெரிவித்தார்.கேரளாவில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. இடுக்கி மாவட்டத்தில் மாணவர்கள் நுழைவு விழா மாவட்ட அளவில் தொடுபுழாவில் தனியார் நடுநிலை பள்ளியில் நடந்தது. அதனை நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் துவக்கி வைத்து பேசியதாவது: கேரள மாநிலம் பொதுக் கல்வி துறையில் பொறாமைப்படத்தக்க விதத்திலும், பெருமைக்குரிய வகையிலும் பெரும் வளர்ச்சி அடைந்து சாதனையை ஏற்படுத்தி உள்ளது. பள்ளிகளை புதுப்பிக்க அரசு ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டது. பல்வேறு பள்ளிகளில் ரூ.5 கோடி, ரூ.2 கோடி, ரூ. ஒரு கோடி என செலவிட்டு 'ஹை டெக்' வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. மாணவர்களுக்கு பாதுகாப்புடன், மகிழ்ச்சியான கல்வியை வழங்குவது நோக்கமாகும். கம்ப்யூட்டர் கல்வி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கல்வி வழங்கும் முன்மாதிரியான பாணியை கேரளா பின்பற்றி வருகிறது. உயர்கல்வி துறையிலும் மாநிலம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டில் முதல் 100 கல்லுாரிகளில் 16 கல்லுாரிகள் கேரளாவில் உள்ளன. அதேபோல் நாட்டில் முதன் முதலாக கேரளாவில் தான் டிஜிட்டல் பல்கலை, அறிவியல் பூங்கா ஆகியவை அமைக்கப்பட்டன., என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை