உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆக்கிரமிப்பு விசாரணை குழுவில் நேர்மையான அதிகாரியை ஈடுபடுத்த வேண்டும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பு விசாரணை குழுவில் நேர்மையான அதிகாரியை ஈடுபடுத்த வேண்டும் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

மூணாறு : மூணாறில் ஆக்கிரமிப்பு தொடர்பான விசாரணை குழுவில் நேர்மையான வருவாய்துறை அதிகாரியை உட்படுத்த வேண்டும் என கேரள உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.மூணாறில் ஆக்கிரமிப்பு தொடர்பாக திருச்சூரைச் சேர்ந்த ' ஒன் எர்த் ஒன் லைப்' எனும் அமைப்பு கேரள உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் முகம்மதுமுஸ்தாக், ஷோபா அன்னம்மாஈப்பன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரிக்கின்றனர்.அது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கூறியதாவது., மூணாறில் ஆக்கிரமிப்பு தொடர்பாக போலீசார் தலைமையிலான விசாரணை குழுவில் நேர்மையான வருவாய்துறை அதிகாரியை உட்படுத்த வேண்டும்.ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு நடத்திய ராஜன்மதேக்கர் அறிக்கையில் குற்றவாளிகளாக கூறப்படும் 19 வருவாய் துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு தெரிவிக்க வேண்டும். பட்டா நிலங்களில் கட்டுமானத்திற்கு வழங்கும் தடையில்லா சான்றிதழின் உண்மை தன்மையை உறுதி செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு தொடர்பாக அதிகாரிகள் மீது கூட்டு சதி என மட்டும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விசாரணையில் திருப்தி இல்லை என்பதால் ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என ஏற்கனவே முன்னெச்சரிக்கை விடப்பட்டது. மூணாறில்மட்டும் இன்றி வாக மண்ணிலும் ஆக்கிரமிப்புகள் நடந்துள்ளன. அவற்றின் பின்னால் பெரும் கும்பல்கள் இருக்க வாய்ப்புள்ளது. போலி ஆவணங்கள் தயாரிக்கப் பட்டுள்ளதால் அதிகாரிகளின் ஒத்துழைப்பு இன்றி நடக்க வாய்ப்பு இல்லை, என்றனர்.ஆக்கிரமிப்பு தொடர்பாக விசாரிப்பதற்கு சிறப்பு குழு அமைக்க இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ