உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மாநில யோகா போட்டிக்கு கூடலுார் மாணவர்கள் தேர்வு

 மாநில யோகா போட்டிக்கு கூடலுார் மாணவர்கள் தேர்வு

கூடலுார்: தென் மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டியில் சாதனை படைத்த கூடலுார் மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தேர்வாகினர். தென்மாவட்ட அளவிலான யோகாசனப் போட்டி கம்பத்தில் நடந்தது. இதில் கூடலுார் ஆர்.எஸ்.கே. நர்சரி பள்ளியைச் சேர்ந்த 8 முதல் 11 வயது பிரிவில் மித்ரன், ரோகித்கிருஷ்ணா முதலிடம் பெற்றனர். சுசின் பிரத்யோகன் இரண்டாமிடமும், கவின்யா, வேதவள்ளி, யுவகரணி மூன்றாமிடம் பெற்றனர். மழலையர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 8 முதல் 11 வயது பிரிவில் சரண்தேவ், அகில் முதலிடம் பெற்றனர். லிகிதாஸ்ரீ, விஷ்வா இரண்டாமிடமும், லோஸ்கித் அன்கோட், ஜஸ்வந்த் பாண்டியன், யுதின் மூன்றாமிடம் பெற்றனர். இவர்கள் மாநில போட்டிக்கு தேர்வாகினர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த யோகா பயிற்சியாளர் ரவிராமையும் பள்ளி முதல்வர்கள் சகிலா சுலைமான், பாலகார்த்திகா, நிர்வாகிகள் நடராஜன், கணேஷ்வரி, ராகினி, லால்குமார், ஆனந்தி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ