மேலும் செய்திகள்
கீழே விழுந்து காயமடைந்த தொழிலாளி சாவு
11-Sep-2024
ஆண்டிபட்டி, : க.விலக்கு அருகே பிராதுகாரன்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி மகன் விஜய் 27, ஜெயமங்கலம் அருகே உள்ள தனியார் கிரஷரில் வேலை பார்த்து வந்தார்.நேற்று முன் தினம் க.விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மோதியதில் பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.சம்பவம் குறித்து க.விலக்கு எஸ்.ஐ., பிரபா வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர், திருமலாபுரம் கல்லுப்பட்டியை சேர்ந்த ராஜாமணி என்பவரிடம் விசாரித்து வருகிறார்.
11-Sep-2024