உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி

 கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி

தேனி: தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கற்றல் திறன் மேம்பாட்டு பயிற்சி, கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறைத்தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர். பள்ளி செயலாளர் சண்முகவேல்பாண்டியன் வரவேற்றார். ஹைதரபாத் சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி முன்னாள் இயக்குநர் ராஜன் பங்கேற்று மாணவர்களிடம் பேசினார். அவர் நுண்திறன்களை வளர்ப்பதன் அவசியம், துறை தேர்வு, முழுகவனம் செலுத்துதல் உள்ளிட்டவை பற்றி விளக்கினார்.வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ராமநாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை