உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வாடகை வழங்காத டாஸ்மாக்கிற்கு பூட்டு

வாடகை வழங்காத டாஸ்மாக்கிற்கு பூட்டு

தேனி; தேனியில் இடத்தின் உரிமையாளருக்கு 21 மாதங்கள் வாடகை வழங்காமல் இழுத்தடித்த நிலையில், டாஸ்மாக் நிர்வாகம் மதுக்கடைக்கு பூட்டு போட்டது.தேனி என்.ஆர்.டி., நகர் இளங்கோ 58. இவருக்கு புதுபஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள 2 சென்ட் இடத்தில் அரசின் டாஸ்மாக் கடைக்கு 2015 செப்., முதல் வாடகைக்கு வழங்கினார். ஆண்டு வாடகையாக ரூ.45 ஆயிரம் வழங்கியது. இட உரிமையாளர், வாடகை நீட்டிப்பிற்கான விருப்பம் இல்லை கடையை காலி செய்ய கோரி மனு அளித்தார். இதனால் 2022 மார்ச் முதல் கடை வாடகை வழங்கவில்லை. உரிமையாளர் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த டிச., 6ல் கடை மேற்பார்வையாளருக்கு டாஸ்மாக் மேலாளர் கடிதம் அனுப்பினார். அதில், கடைக்கு மாற்று இடம் பார்த்து, அதன் அறிக்கையை 2023 டிச.,31க்குள் அளிக்க வேண்டும் எனவும், தவறினால் 2024 ஜனவரி 1 ல் கடை பூட்டப்படும்' என அறிவுருத்தினார். மேற்பார்வையாளர் மாற்று இடம் பார்க்கததால் நேற்று முதல் கடை தற்காலிகமாக மூடினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை