பெண்ணை தாக்கியவர் கைது
போடி : போடி நந்தவனம் தெருவை சேர்ந்தவர் பாண்டீஸ்வரி 28. வீட்டு வேலை செய்து வருகிறார். இவர் நேற்று பரமசிவன் கோயில் ரோட்டில் டூவீலரில் வந்துள்ளார். அப்போது மேலச்சொக்கநாதபுரம் வினோபாஜி காலனியைச் சேர்ந்த முத்தழகன் 44. என்பவர் பாண்டீஸ்வரியை தகாத வார்த்தையால் பேசி, அடித்து விட்டு ஓடி உள்ளார். பாண்டீஸ்வரி புகாரில் போடி டவுன் போலீசார் முத்தழகனை கைது செய்து விசாரிக்கின்றனர்.