உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  வழக்குகளில் தேடப்பட்டவர் 17 ஆண்டுகளுக்குப் பின் கைது

 வழக்குகளில் தேடப்பட்டவர் 17 ஆண்டுகளுக்குப் பின் கைது

கூடலுார்: கேரளாவில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் 17 ஆண்டுகளுக்குப் பின் கேரள போலீசார் கைது செய்தனர். ஓடைப்பட்டி அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன். இவர் 2008ல் கேரளாவில் இரவு நேரங்களில் வீட்டின் கதவுகளை உடைத்து தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் தாலி உட்பட நகைகளை கொள்ளையடித்த வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். மேலும் குமுளி, முட்டம், தொடுபுழா உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களிலும் இவர் மீது திருட்டு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளது. தலைமறைவாக இருந்த இவரை குமுளி போலீசார் கடந்த 17 ஆண்டுகளாக தேடி வந்தனர். இந்நிலையில் இவர் காமாட்சிபுரத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து குமுளி போலீசார் இவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர் 'குறுவா' என்ற கொள்ளை கும்பலை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கும்பலில் இருப்பவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை