உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மாந்தோப்பு குத்தகை ரூ.8 லட்சத்திற்கு ஏலம்

மாந்தோப்பு குத்தகை ரூ.8 லட்சத்திற்கு ஏலம்

ஆண்டிபட்டி, :வைகை அணை வலது கரையில் உள்ள மாந்தோப்பில் காய்கள் பறிக்கும் குத்தகைக்கான ஏலம் நீர்ப்பாசன துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், உதவிப்பொறியாளர் குபேந்திரன் முன்னிலையில் நடந்தது. ரூ.4.32 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. ரூ. 1 லட்சத்து 50 ஆயித்துக்கான டி.டி., செலுத்தி 103 பேர்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக ரூ.8 லட்சத்திற்கு ஏலம் கேட்ட பிரியதர்ஷினிக்கு ஓராண்டிற்கான குத்தகை உரிமம் வழங்கப்பட்டது. வரிகள் உட்பட ரூ.9.84 லட்சம் பணமாக செலுத்தி குத்தகைக்கான உரிமம் பெற்றார். கடந்த ஆண்டு ரூ.3.84 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ