உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மார்கழி திருவிளக்கு பூஜை

மார்கழி திருவிளக்கு பூஜை

கூடலுார் : கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் மார்கழி மாத திருவிளக்கு பூஜை நடந்தது.கூடலுாரில் வரலாற்றுச் சிறப்புமிக்க கூடலழகிய பெருமாள் கோயிலில் மார்கழி நீராட்டு விழா டிச. 17ல் துவங்கியது. மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சிறப்பு பூஜை நடைபெறும். மார்கழி 19 ம் நாளான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை, அலங்கார பூஜைகள் நடந்தன. மார்கழி மாத திருப்பாவை நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மக்கள் நோய் நொடியின்றி, இயற்கை சீற்றங்களில் இருந்து விடுபட்டு வாழவும், நினைத்த காரியம் நிறைவேறவும் விளக்கு பூஜையில் பெண்கள் வேண்டினர். பஜனை பாடல்கள் பாடப்பட்டது. துளசி, தீர்த்த நீர், பொங்கல் வழங்கப்பட்டது. அதிகாலையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை