உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துவ முகாம்

ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துவ முகாம்

கூடலுார் : அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், தேனி தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் லோயர்கேம்ப் குறுவனத்துப் பாலம் அருகே பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் மருத்துவ முகாம் நடந்தது.சபரிமலையில் மகரஜோதி விழாவிற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஐயப்ப பக்தர்கள் அதிகமாக வந்த வண்ணம் உள்ளனர். வாகனங்களிலும், நடைபயணமாகவும் அதிகளவில் வருகின்றனர். பக்தர்களை பரிசோதனை செய்து தேவையான மாத்திரைகள், மருந்து வழங்கப்பட்டன. மேலும் மருத்துவ ஆலோசனைகளும் கூறப்பட்டன. டாக்டர்கள் அழகர்சாமி, சிவ இளங்கோ, சேகர் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். ஏற்பாடுகளை அகில பாரத ஐயப்ப சேவா சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் பாரி, மாவட்ட துணைச் செயலாளர் சுசீந்திரன், தலைவர் பெருமாள், செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை