உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா

கடமலைக்குண்டு: கண்டமனூர் அருகே கணேசபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை வைத்தார். தலைமை ஆசிரியர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜான்சன், கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சித்ரா, மாவட்ட கல்வி கூடுதல் திட்ட அலுவலர் மோகன், வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை