உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தண்ணீர் தேடி கடமான்கள் உலா

தண்ணீர் தேடி கடமான்கள் உலா

கம்பம்: கம்பம் மலையடிவாரங்களில் கடமான் கூட்டம் குடிக்க தண்ணீர் தேடி தோட்டங்களில் உலா வருகிறது.மாவட்டத்தில் கடந்த மாதம் மழை நின்ற பின் அதிகாலை பனியும், பகலில் வெப்பமும் அதிகரித்து வருகிறது. தற்போது நாளுக்கு நாள் கோடை வெப்பம் அதிகரிப்பால் வன உயிரினங்கள் குடிக்க தண்ணீர் தேடி இரவங்கலாறு, மேகமலை, வெண்ணியாறு வண்ணாத்திபாறை, வட்டப்பாறை பகுதிகளில் இருந்து யானைகள், காட்டு மாடுகள், மான்கள் தேக்கடி ஏரியை நோக்கி செல்கிறது.கம்பமெட்டு வனப்பகுதியில் உள்ள கடமான்கள், காட்டு பன்றிகள் கூடலூர் கம்பம், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம் மலையடிவாரங்களில் இருந்து தோட்ட பகுதிகளுக்கு வருகிறது.அங்குள்ள கிணறுகளுக்கு அருகில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் குடித்து செல்கிறது.வனப்பகுதிகளில் செயற்கையாக அமைக்கப்பட்ட தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி வன உயிரினங்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்ய வனத்துறை முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை