உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா வைத்திருந்த தாய், மகன் கைது

கஞ்சா வைத்திருந்த தாய், மகன் கைது

தேனி : தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பூதிப்புரம் கோட்டை மேட்டுத்தெருவில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் புதரில் சோதனை செய்த போது அதே பகுதியை சேர்ந்த செல்வராணி 55, அவரது மகன் ஆட்டோ டிரைவர் ராஜபிரபு 41 ஆகியோர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.30ஆயிரம் மதிப்பிலான 2கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். அவர்களை கைது செய்தனர். விசாரணையில் கூடலுார் பேச்சியம்மன் கோவில்தெரு சோவு என்பவரிடம் வாங்கி வந்ததாக தெரிவித்தனர். சோவு தலைமறைவாக உள்ளார். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை