உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 140 அடியை எட்டியது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

 முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 140 அடியை எட்டியது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று மாலை 140 அடியை எட்டியதால் கேரள பகுதிக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத் துறையினர் விடுத்தனர். கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்ததால் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி 140 அடியை எட்டியது. (மொத்த உயரம் 152 அடி). இதனால் அணையை ஒட்டியுள்ள வள்ளக்கடவிலிருந்து வண்டிப்பெரியாறு, உப்புதரா, சப்பாத்து உள்ளிட்ட பகுதியில் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் வசிப்பவர்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத்துறையினர் விடுத்தனர். இதற்கான தகவலை இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளனர். நீர்மட்டம் 141 அடியாக உயரும் போது இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 142 அடியாகும்போது மூன்றாம் மற்றும் இறுதி கட்ட எச்சரிக்கையும் விடப்படும். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3998 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 7075 மில்லியன் கன அடியாகும். தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டிருந்த 400 கன அடி நீர் நேற்று காலை முதல் 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பெரியாறில் 4.8 மி.மீ., தேக்கடியில் 19.4 மி.மீ., மழை பதிவானது. நீர் திறப்பு அதிகரிப்பால் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 72 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ