உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பயன்பாட்டிற்கு வந்தது நகராட்சி எரிவாயு மயானம்

பயன்பாட்டிற்கு வந்தது நகராட்சி எரிவாயு மயானம்

தேனி, : தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட எரிவாயு மயானம் 29வது வார்டு பள்ளி வாசல் தெருவில் உள்ளது. இந்த மயானம் சில ஆண்டுகளுக்கு முன் எரிவாயு தகன மின் மயானமாக மேம்படுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு முன் ரூ.55 லட்சம் செலவில் எரிவாயு மயானம் புணரமைக்கும் பணி துவங்கியது. கடந்த மாதம் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்தது. நேற்று பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. நிகழ்விற்கு தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் முன்னிலை வகித்தார். நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, துணைத் தலைவர் செல்வம், கமிஷனர் ஏகராஜ், தி.மு.க., முன்னாள் நகர பொறுப்பாளர் பாலமுருகன், நகரச் செயலாளர் நாராயண பாண்டியன், நகராட்சி கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி, அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை