உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மூணாறு மாரத்தான் போட்டிகள் 2026 ஜன. 24, 25ல் நடக்கிறது

மூணாறு மாரத்தான் போட்டிகள் 2026 ஜன. 24, 25ல் நடக்கிறது

மூணாறு: மூணாறு மாரத்தான் போட்டிகள் 2026 ஜன.24, 25 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்துள்ளதாக எம்.எல்.ஏ.ராஜா, கெஸ்ட்ரல் அட்வெஞ்சர்ஸ் அமைப்பு தலைமை நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்தனர். மூணாறில் கெஸ்ட்ரல் அட்வெஞ்சர் எனும் சமூக அமைப்பு சார்பில் ஆண்டு தோறும் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆறாம் ஆண்டு மாரத்தான் போட்டிகள் 2026 ஜன.24, 25 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த முறை விளையாட்டு சுற்றுலாவுடன் மாற்றுதிறனாளிகள் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 71 கி.மீ., தொலை தூர அல்ட்ரா சேலஞ்ச், 42. 195 கி.மீ., தூரம் முழு மாரத்தான், 21.1 கி.மீ., தூரம் அரை மாரத்தான், 7 கி.மீ., தூரம் ரன் பார் பன் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. அதற்கு முறையே ரூ.2500, ரூ.1500, ரூ.1100, ரூ. 800 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமகன்களுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் சலுகையும், மாணவர்கள் இலவசமாகவும் பங்கேற்கலாம். தவிர சுற்றுச் சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை நோக்கமாக கொண்டு வண்ண விழா 2026 ஜன.22 முதல் ஜன.26 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.munnarmarathon.comஎன்ற இணையதளம், 9447031040 அலைபேசி எண் ஆகியவற்றின் வாயிலாக தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை தேவிகுளம் எம்.எல்.ஏ.ராஜா, கெஸ்ட்ரல் அட்வஞ்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !