உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியகுளத்தில் மூதாட்டி கொலை

பெரியகுளத்தில் மூதாட்டி கொலை

பெரியகுளம், : பெரியகுளத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஆண்டாள் 80,என்பவர் கொலை செய்து இறந்து கிடந்தார். எஸ்.பி., சிவபிரசாத் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.பெரியகுளம் வடகரை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பிச்சை மனைவி ஆண்டாள் 80. இவரது கணவர் பிச்சை 20 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இவரது மகள் நாச்சாரம்மாள் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். பேரன் கொத்தனார் மாரிக்குமார் 35. பராமரிப்பில் அவருடன் ஆண்டாள் வசித்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன் சோழவந்தானில் தங்கல் வேலைக்கு மாரிக்குமார், பாட்டி ஆண்டாளுக்கு செலவுக்கு பணம் கொடுத்து சென்றார். வழக்கமாக காலையில் எழுந்திருக்கும் பழக்கமுடைய ஆண்டாள் எழுந்திருக்கவில்லை. பக்கத்து வீட்டைச் சேர்ந்த இவரது தோழி சாலாஜி 83.ஆண்டாளுக்கு காபி வாங்கி தருவதற்கு வீட்டிற்கு சென்றார். அங்கு ஆண்டாள் ஆடை அவிழ்ந்த நிலையில் 'நிர்வாணமாக' கிடந்தார். இதனை பார்த்த சாலாஜி அலறியுள்ளார்.புகாரில் டி.எஸ்.பி., நல்லு விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையில் மூதாட்டி தனிமையில் இருப்பதை தெரிந்து இரவில் சென்ற மர்மநபர் ஆண்டாள் சத்தமிடாமல் இருக்க அவரது வாய், மூக்கில் இறுக துணியைக்கட்டி சித்திரவதை செய்து கொலை செய்தாரா என் சந்தேகிக்கின்றனர். மோப்பநாய் பைரவ் வரவழைக்கப்பட்டது. ஆண்டாள் உடல் பிரேத பரிசோதனைக்கு தேனி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ