| ADDED : நவ 19, 2025 06:30 AM
தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லுாரி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிகளுக்கு குடிநீர் வினியோகிக்கும் வகையில் புதிய திட்டத்திற்கு அறிக்கை தயாரித்து வருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தற்போது தினமும் 6லட்சம் முதல் 6.5 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு தற்போது தண்ணீர் பிரச்னை இல்லை. மேலும் எம்.பி., சார்பில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, மாவட்ட மாதிரி மேல்நிலைப்பள்ளி, அரசு பாலிடெக்னிக், மாவட்ட சிறைக்கு குடிநீர் வழங்கும் வகையில் திட்டம் அமைக்க தெரிவிக்கப்பட்டது. அதற்காக குன்னுாரில் இருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் விதமாக அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது. எதிர்கால தேவையை அடிப்படையாக கொண்டு இந்த திட்டம் தயாரிக்கப்பட உள்ளது என்றனர்.