உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மண் சுவர் விழுந்து மூதாட்டி பலி

மண் சுவர் விழுந்து மூதாட்டி பலி

--தேவதானப்பட்டி, நவ. 2----தேவதானப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த முஸ்தபா மனைவி ஆயிஷாபீவி 75. தனியாக வசித்து வருகிறார்.தேவதானப்பட்டி பகுதியில் நேற்று சாரல் மழையும் பெய்தது. மாலையில் வீட்டின் ஒரு பக்க சுவர் ஆயிஷாபீவி மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பெரியகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் வீரர்கள் சுவர் இடிபாடுகளை அகற்றி உடலை மீட்டனர். தாசில்தார் மருதுபாண்டி, தேவதானப்பட்டி ஆர்.ஐ., தமிழ்செல்வி பார்வையிட்டனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை