மேலும் செய்திகள்
அடகு வைத்த நகையை திருப்பி தராதவர் மீது வழக்கு
16-Oct-2025
தேனி: தேனி அருகே மூன்று பவுன் நகையை அடகு பெற்று, பணத்தை ஏமாற்றி தலைமறைவான தங்கம்மாள்புரத்தை சேர்ந்த அழகுராஜா 40, என்பவரை போலீசார் 7 ஆண்டுகளுக்கு பின் கைது செய்தனர். கடமலைக்குண்டு தங்கம்மாள்புரம் செல்வம். அரசு உரிமம் பெற்று அப்பகுதியில் நகை அடகு கடை நடத்தினார். இவரிடம் கோயில்பாறை ரமேஷ் 2012ல் தனது 3 பவுன் தங்க நகையை அடகு வைத்து ரூ.20 ஆயிரம் பெற்றார். அதன் பின் அதேப்பகுதியை சேர்ந்த ராமர், சக்கணன், காளீஸ்வரி, சிவகாமி, அழகுராஜா ஆகிய ஐந்து பேர் அடகு கடையை நிர்வகித்தனர். 2014ல் வட்டியுடன் பணத்தை செலுத்தி 3 பவுன் நகையை மீட்க சென்றார். அவரிடம் பணத்தை பெற்றவர்கள் சிறிது நேரத்திற்கு பின் நகையை பெற்றுக் கொள்ளுங்கள் என்றனர். வெளியில் சென்ற ரமேஷ் மீண்டும், அடகு கடைக்கு சென்றபோது, அனைவரும் கடையை பூட்டிவிட்டு தலைமறைவாகினர். பணத்தை பெற்று, நகையையும் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ், தேனி எஸ.பி.,யிடம் புகார் அளித்தார். மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உரிமம் பெற்ற செல்வம், ராமர், சக்கணன், காளீஸ்வரி, சிவகாமி, அழகு ராஜா உட்பட ஆறு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்த வழக்கு தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. அழகுராஜாவை தவிர மற்றவர்கள் ஜாமினில் உள்ளனர். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனை தொடர்ந்து அழகுராஜாவை கைது செய்தனர்.
16-Oct-2025