உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கதம்ப வண்டு தாக்கி ஒருவர் பலி

கதம்ப வண்டு தாக்கி ஒருவர் பலி

போடி : அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் மில்டன் 55. இவருக்கு சொந்தமான மாந்தோப்பு அணைக்கரைப்பட்டி அருகே சின்ன மொடக்கு பகுதியில் உள்ளது. நேற்று இவர் தோட்டத்திற்கு செல்வதற்காக சின்னமொடக்கு ஓடையில் நடந்து சென்றுள்ளார். அப்போது பறந்து வந்த கதம்ப வண்டு இவரை கொட்டியுள்ளது. வலி தாங்க முடியாத நிலையில் கதம்ப வண்டு கொட்டியது குறித்து மகள் அலீனாவிடம் அலை பேசியில் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர்கள் மில்ட்டனை போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்துள்ளனர். பரிசோதனை செய்ததில் மில்ட்டன் வரும் வழியில் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை