உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அரசு பஸ் டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

அரசு பஸ் டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

தேவதானப்பட்டி: அரசு பஸ் டூவீலர் மீது மோதிய விபத்தில் டூவீலரில் சென்ற சண்முகராஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.தேவதானப்பட்டி அருகே அட்டணம்பட்டி அழகர்சாமி தெரு லாரி டிரைவர் சண்முகராஜா 45. இவர் நேற்று காலை டூவீலரில் புல்லக்காபட்டியில் இருந்து அட்டணம்பட்டி நோக்கிச் சென்றார். அட்டணம்பட்டியில் திரும்பும் போது தேனியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சண்முகராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். கோவை நரசிம்மநாயக்கர் பாளையத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் சரவணனிடம் 42, தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை