உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

டூவீலர் விபத்தில் ஒருவர் பலி

தேனி; தேனி ரத்தினம்நகர் சரவணன் 54. இவர் ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் ஓட்டுநராக உள்ளார். நேற்று முன்தினம் பணி முடித்து வீடு திரும்பினார். புது பஸ் ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி விலக்கு செல்லும் வழியில் எதிரே வாகனம் வந்ததால் இவரது டூவீரை ரோட்டின் ஓரத்தில் இறக்கினார். இதில் நிலை தடுமாறிய சரவணன் கீழே விழுந்தார். காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பணியில் இருந்த மருத்துவர்கள் சரவணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி லதா புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை