உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வேன் மோதி ஒருவர் பலி

வேன் மோதி ஒருவர் பலி

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி குள்ளப்புரம் சந்து பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் 33, இவர் தனது மனைவி பூச்சியம்மாள் 28, மகள் பவித்ரா 5, மற்றும் உறவினர் மாரிக்கனி 35 ஆகியோர்களை ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தேனி ரோட்டில் சென்றார். ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் அருகே பின்னால் சென்ற வேன் இருசக்கர வாகனத்தில் மோதியது. பலத்த காயம் அடைந்த நான்கு பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி மாரிக்கனி இறந்தார்.மற்ற மூவரும் சிகிச்சை பெறுகின்றனர். ஆண்டிபட்டி போலீசார் மதுரை திருநகரைச் சேர்ந்த வேன் டிரைவர் கார்த்திகேயன் 36, மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ