உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மார்க்கையன்கோட்டையில் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் மறியல்

மார்க்கையன்கோட்டையில் ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் மறியல்

சின்னமனூர் : சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பஸ் மறியல் செய்தனர்.மார்க்கையன்கோட்டை முல்லைப் பெரியாற்றில் தடுப்பணை ஒன்று கட்டுவதற்காக தேனி எம்.பி. ரவீந்திரநாத் தனது தொகுதி நிதியிலிருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். இது தொடர்பாக கல்வெட்டு மார்க்கையன்கோட்டை பாலம் அருகில் வைக்கப்பட்டிருந்தது. இந்திலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ கல்வெட்டை உடைத்து சேதப்படுத்தி விட்டனர்.நேற்று காலை கல்வெட்டு உடைக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் மார்க்கையன் கோட்டை முன்னாள் பேரூராட்சி தலைவர் அகிலன் தலைமையில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மார்க்கையன்கோட்டை - சின்னமனூர் - ரோட்டில் பஸ் மறியல் -போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னமனூர் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் போராடடத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ