உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஊராட்சி கட்டட அனுமதி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஊராட்சி கட்டட அனுமதி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தேனி : மாவட்டத்தில் 130 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு https://onlineppa.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கட்டுமானம் 2500 ச.அடி பரப்பிற்கு உட்பட்டது என்றால், விண்ணப்பித்து அனுமதிய ஆணையை ஆன்லைனில் பதிவிறக்கம்செய்யலாம். அல்லது 2500 ச.அடிக்கு மேல் என்றால் இணைய வழி விண்ணப்பித்த ஒப்புகை சீட்டு, இதர ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணங்களையும் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை