உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் டூவீலர் ஸ்டாண்டாக மாறிய தற்காலிக பஸ் ஸ்டாப் பயணிகள் அவதி

தேனியில் டூவீலர் ஸ்டாண்டாக மாறிய தற்காலிக பஸ் ஸ்டாப் பயணிகள் அவதி

தேனி: தேனியில் மதுரை ரோட்டில் அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் ஸ்டாப் டூவீலர் ஸ்டாண்டாக மாறி உள்ளது. இதனால் பயணிகள் அவதியடைகின்றனர்.தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி, கம்பம் ரோட்டில் ராஜவாய்க்கால் பாலம் அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியை நகராட்சி, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் தனித்தனியாக மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகள் நடந்து வருவதால் கம்பம் ரோட்டில் இருந்து வரும் பஸ்கள் பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல முடியவில்லை. இதனால் மதுரை ரோட்டில் செல்லும் பஸ்கள் பயணிகளை ஏற்றி, இறக்க பகவதியம்மன் கோயில் அருகில் தற்காலிக பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டது. பயணிகள் வெயிலால் அவதியடைந்து வந்தனர். இதனால் தென்னை ஓலை வேயப்பட்ட நிழற்கூரை அமைக்கப்பட்டது.இந்த நிழற்கூரையும் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை தற்போது உருவாகி உள்ளது. இந்த நிழற்கூரையை சிலர் டூவீலர் ஸ்டாண்டாக மாற்றிவிட்டனர். இதனால் பயணிகள், மழையிலும், வெயிலிலும் ரோட்டில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நிழற்கூரையில் நிற்கும் டூவீலர்களை அப்புறப்படுத்த போலீசார், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை