உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனியில் கோயில் பிரச்னையில் அமைதி பேச்சு வார்த்தை

தேனியில் கோயில் பிரச்னையில் அமைதி பேச்சு வார்த்தை

தேனி: அன்னஞ்சி சந்திப்பில் உள்ள காளியம்மன் கோயிலை நிர்வகிப்பதில் இருதரப்பு பிரச்னை குறித்து தேனி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.இக்கோயிலை இரு சமூகங்கத்தினர் நிர்வகித்து வந்தனர். தற்போது கோயில் நிர்வகித்து வருபவருக்கும், பூஜாரி இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. முறைகேடுகள் நடந்திருப்பதாக மாறி, மாறி புகார் தெரிவித்தனர்.இருதரப்பினரும் கலெக்டர் அலுவலகத்தில் கோயில் நிர்வகிக்கும் உரிமையை தங்களுக்கே வழங்க வேண்டும் என மனு அளித்தனர். இதனால் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நேற்று தேனி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இதில் கோயிலை நிர்வகித்த ஒருவரும்,பூஜாரியும் தரப்பும் தனித்தனியாக தங்கள் தரப்பு விபரங்களை கோரிக்கை மனுக்களை எழுதி வழங்கினர். விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி