உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ நிறுத்துவதில் இருதரப்பு மோதல்; நாளை அமைதி பேச்சுவார்த்தை

தேனி பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ நிறுத்துவதில் இருதரப்பு மோதல்; நாளை அமைதி பேச்சுவார்த்தை

தேனி : தேனி புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை தொடர்பாக நாளை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் ஆண்டிபட்டி பஸ்கள் நிற்கும் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது. இதில் ஆட்டோக்கள் நிறுத்துவது தொடர்பாக இருதரப்பு இடையே சில நாட்களாக தகராறு ஏற்பட்டது. நேற்று இருதரப்பு இடையே மோதல் சூழல் உருவானது. அப்பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேனி டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையில் 4இன்ஸ்பெக்டர்கள், போலீசார் ஆட்டோ டிரைவர்களிடம் பேசினர். பின் எஸ்.பி., அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதே நேரம் ஒரு தரப்பினர் கலெக்டர் அலுவலகம் முன் ரோடு மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின் எஸ்.பி., அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் நாளை(அக்.,6ல்) தேனி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது, இருதரப்பினரும் ஸ்டாண்ட் தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை