உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரேஷன் கடைகளை ஒப்படைக்காத  வளர்ச்சித்துறையால்  மக்கள் அவதி

ரேஷன் கடைகளை ஒப்படைக்காத  வளர்ச்சித்துறையால்  மக்கள் அவதி

தேனி: மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடைகளை கூட்டுறவுத் துறையினரிடம் ஊரக வளர்ச்சித்துறையினர் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்துவதால், பொது மக்கள் நீண்ட துாரம் பயணித்து ரேஷன் பொருட்கள் வாங்கிச் செல்லும் நிலை தொடர்கிறது. மாவட்டத்தில் கிராமங்களில் புதிய ரேஷன் கடைகள் கட்டும் பணிகள் ஊரக வளர்ச்சித்துறையால் மேற்கொள்ளப்படுகிறது. பழைய கட்டடங்கள் சீரமைத்தும், பொது மக்கள் நீண்ட துாரம் பயணிக்க வேண்டி இடங்களில் குறிப்பிட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு சில இடங்களில் ரேஷன் கடைகள் அமைக்கப்படுகிறது. இது தவிர வாடகை கட்டடங்களில் செயல்படும் ரேஷன் கடைகள் அரசு நிலங்களில் கட்டப்பட்டு வருகிறது. புதிய ரேஷன் கடைகள் சுமார் ரூ.14 லட்சம் முதல் ரூ. 21 லட்சம் வரை கட்டப்படுகிறது. பெரியகுளம் தாலுகாவில் நேருநகர், ஜெயமங்கலம், பின்னத்தேவன்பட்டி ஆகிய இடங்கள் உட்பட மாவட்டத்தில் 13க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இதில் சில திறப்பு விழாவுடன் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையினர் கூறுகையில், ''சில இடங்களில் மின் இணைப்பு வாங்காமல் உள்ளது. பல இடங்களில் கட்டி முடிக்கப்பட்டாலும் ஊரக வளர்ச்சித்துறையினர் ரேஷன் கடை கட்டடங்களை ஒப்படைக்காமல் உள்ளனர். இதனால் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டாலும் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் சிக்கல் நீடிக்கிறது.'', என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை