உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  குண்டும், குழியுமான ரோடு சீரமைக்காததால் மக்கள் சிரமம் மணியம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு

 குண்டும், குழியுமான ரோடு சீரமைக்காததால் மக்கள் சிரமம் மணியம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு

போடி: போடி அருகே மணியம்பட்டி ஊராட்சியில் ரோடு, நூலகம், சாக்கடை தரைப்பாலம், மயானத்தில் அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் தவிப்பு அடைந்து வருகின்றனர். போடி ஒன்றியம், மணியம்பட்டி ஊராட்சி இந்திரா காலனி, நடுத்தெரு, தெற்கு தெரு, ஊராட்சி அலுவலகம் ரோடு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. உப்புக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஊராட்சி அலுவலகம் அருகே மகளிர் சுய உதவி குழுவிற்காக புது வாழ்வு திட்டத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. பல ஆண்டுகள் ஆனதால் பராமரிப்பு இன்றி கட்டடம் சேதம் அடைந்து பயன்பாடு இன்றி உள்ளது. இந்திரா காலனி செல்லும் ரோட்டில் ஆபத்தான நிலையில் சாக்கடை தரைப்பாலம் சேதம் அடைந்து உள்ளது. போதிய தெருவிளக்கு இல்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் கூறியதாவது: சாக்கடை தரைப்பாலம் சேதம் குமரேசன், மணியம்பட்டி: இந்திரா காலனி தெற்கு தெருவில் சாக்கடை தரைப்பாலம் சேதம் அடைந்து பல மாதங்கள் ஆகியும் சீரமைக்காதால் வாகனங்களில் செல்ல சிரமம் உள்ளது. மயான பாதையில் ரோடு வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல சிரமம் ஏற்படுகிறது. இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு தண்ணீர் வசதி இல்லாததால் அருகே உள்ள தோட்டங்களுக்கு சென்று தண்ணீர் சுமந்து வருகின்றனர். மயானத்தில் மின் வசதி இல்லாததால் இரவில் சிரமம் ஏற்படுகிறது. கிராமத்தில் சேகரமாகும் குப்பையை தெற்கு தெரு அருகே உள்ள ஓடையில் கொட்டி வருகின்றனர். அப்பகுதியில் உற்பத்தியாகும் கொசுவால் மக்கள் பாதிப்பு அடைந்து வரு கின்றனர். மயானத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோடு ரொம்ப மோசம் செல்வக்குமார், மணியம்பட்டி: மணியம்பட்டியில் இருந்து ஒண்டிவீரப்ப சுவாமி கோயில் செல்லும் பாதையில் ரோடு அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. விவசாயிகள் விளை பொருட்களையும், தளவாட பொருட்களை கொண்டு செல்ல சிரமம் ஏற்படுகிறது. சேதமடைந்த மக்கள் நடந்து டூவீலர் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பில் கிராம ஊராட்சி சேவை மையக் கட்டடம் கட்டி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாடு இன்றி சேதம் அடைந்து வருகிறது. சேதம் அடைந்த ரோட்டை சீரமைத்தும், ஊராட்சி சேவை மைய கட்டடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ