உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கோயில் திருவிழா கொண்டாட கலெக்டர் ஆபீசில் மக்கள் மனு

 கோயில் திருவிழா கொண்டாட கலெக்டர் ஆபீசில் மக்கள் மனு

தேனி: பெரியகுளம் தாலுகா, குள்ளப்புரத்தில் மருத காளியம்மன் கோயில் உள்ளது.இக்கோயில் ஊர் பொது மக்கள் வழிபாடு நடத்தி திருவிழா கொண்டாடப்படும். 2022ல் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் திருவிழா முளைப்பாரி எடுத்து செல்வதில் ஏற்பட்ட பிரச்னையால் திருவிழா நடத்த முடியவில்லை. இந்நிலையில் அனைத்து சமுகங்களை ஒருங்கிணைத்து திருவிழா நடத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கிராம நிர்வாகிகள் சக்திவேல், முன்னாள் ஊராட்சி தலைவர் கணேசன், பிச்சைமணி உள்பட அனைத்து சமூகங்களின் சமுதாயத் தலைவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவனிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ