உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை தரைப் பாலத்தில் விதிமீறும் சுற்றுலாப் பயணிகள் கண்டு கொள்ளாத போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள்

வைகை அணை தரைப் பாலத்தில் விதிமீறும் சுற்றுலாப் பயணிகள் கண்டு கொள்ளாத போலீசார், பொதுப்பணித்துறை அதிகாரிகள்

ஆண்டிபட்டி : வைகை அணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் தரைப் பாலத்தில் அமர்ந்து ஆபத்தை உணராமல் ஆற்றில் இறங்குகின்றனர். சுற்றுலாப் பயணிகளை அதிகாரிகள், போலீசார் கண்டு கொள்ளாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.வைகை அணையில் திறக்கப்படும் நீர் தரைப்பாலம் வழியாக பெரிய பாலத்தை கடந்து 'பிக்கப்' அணையில் சேர்கிறது. பின் அங்கிருந்து தேவைக்கு ஏற்ப ஆற்றின் வழியாகவும், பாசனக் கால்வாய் வழியாகவும் பிரித்து அனுப்பப்படுகிறது. தற்போது வைகை அணையில் இருந்து சிறிய மதகுகள் வழியாக வினாடிக்கு 2000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேறுகிறது. தரைப்பாலத்தை கடந்து செல்லும் நீர் அதிக வேகத்துடனும் இழுவையுடனும் செல்கிறது. இந்நிலையில் வைகை அணைக்கு சுற்றுலா வரும் பயணிகள் பெண்கள், குழந்தைகள் உட்பட தரைப் பாலத்தில் அமர்ந்து ஆற்றில் செல்லும் நீரில் இறங்கும் முயற்சியை மேற்கொள்கின்றனர். சிறு கவனக்குறைவானாலும் வேகமாகச் செல்லும் நீரில் அடித்துச் செல்லும் நிலை உள்ளது. ஆபத்தை உணராத இந்நிகழ்வை சுற்றுலா பயணிகள் தினமும் மேற்கொள்கின்றனர்.குறிப்பாக பாலத்தின் கீழ் இறங்கி செல்பி எடுப்பதும் தொடர்கிறது. நீர்ப்பாசனத்துறை பணியாளர்கள், போலீசார் தரைப்பாலம் வழியாக ஆற்றில் இறங்குபவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. விதிகளை மீறி ஆபத்தை வரவழைக்கும் சுற்றுலாப் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீசார் முன் வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை