உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்... ::

போலீஸ் செய்திகள்... ::

மனைவிகள் மாயம்: போலீசார் விசாரணைபோடி: பொட்டல்களம் வினோபாஜி காலனி பிச்சைமணி 33. காளவாசல் கூலி. இவரது மனைவி பானுமதி 27. கேரளா தோட்டத்தில் கூலி வேலை செய்து வருகிறார். 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பானுமதியை காண வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பிச்சைமணி புகாரில் போடி தாலுகா போலீசார் காணாமல் போன பானுமதியை தேடி வருகின்றார்.ஆண்டிபட்டி: டி.ராஜகோபாலன்பட்டி கூலித் தொழிலாளி வேல்முருகன் 30. இவரது மனைவி கவுசல்யா 27. நேற்று முன்தினம் இரவில் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தவரை திடீரென காணவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. வேல்முருகன் புகாரில் போலீசார் கவுசல்யாவை தேடி வருகின்றனர்.ஆண்டிபட்டி: திம்மரசநாயக்கனுார் மூக்கையா 32. இவரது மனைவி பாண்டிதேவி 25. இவர்களுக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. டிசம்பர் 2ல் மகன் டிவின்குமாருடன் வீட்டை விட்டு சென்ற பாண்டிதேவி திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் உறவினர்களிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. மூக்கையா புகாரில் ஆண்டிபட்டி எஸ்.ஐ., ராஜசேகர் வழக்கு பதிந்து, பாண்டிதேவியை தேடி வருகிறார்.மது பதுக்கியவர் கைதுபோடி: புதுக்காலனியில் வசிப்பவர் வீரக்குமார் 47. இவர் அனுமதி இன்றி விற்பனை செய்வதற்காக 7 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தார். போடி டவுன் போலீசார் வீரக்குமாரை கைது செய்து, மது பாட்டில்களை கைப்பற்றினர்.உடலில் தீ பிடித்து ஒருவர் பலிபெரியகுளம்: வடுகபட்டி கன்னிமார் கோயில் தெரு ஆறுமுகம் 71. கால் வலிக்கு தேய்ப்பதற்காக எண்ணெய்யை அடுப்பில் சூடேற்றினார். எதிர்பாராத விதமாக அடுப்பில் இருந்து நெருப்பு உடலில் பரவியது. தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறுமுகம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை