போலீஸ் செய்திகள்...
இறைச்சி கடையில் ரூ.1.38 லட்சம் திருட்டுதேனி: அல்லிநகரம் வடக்குத்தெரு நாகேந்திரன் 34. இவர் அரண்மனைப்புதுார் சத்திரப்பட்டி ரோட்டில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார். நவ. 24ல் கடையில் விற்பனை செய்த ரூ.1.38 லட்சத்தை கடையில் வைத்திருந்தார். வீட்டிற்கு சென்றுவிட்டு, மறுநாள் கடைக்கு சென்றார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். புகாரில் சம்பவ இடத்திற்கு சென்ற பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.இடையூறு செய்தவர் கைதுதேனி: கோட்டூர் தெற்குத்தெரு சூரியபிரகாஷ் 25. இவர் தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டு பெண்கள், டூவீலரில் செல்வோர்களை கேலி பேசி, தகாத வார்த்தைகளால் திட்டி இடையூறு செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.லாட்டரி விற்றவர் கைதுதேனி: கம்பம் மாரியம்மன் கோயில் தெரு காசிம் 80. இவர் கம்பமெட்டு ரோடு நாட்டுக்கல் தெருவில் தடைசெய்யப்பட்ட ரூ.50 மதிப்புள்ள 16 கேரளா மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தார்.அவரை போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுக்களை கைப்பற்றினர்.எலக்ட்ரீசியன் தற்கொலைதேனி: உத்தமபாளையம் மார்க்கையன்கோட்டை நீலமேகம் பிள்ளைத் தெரு மருதமூர்த்தி 47. எலக்ட்ரீசியன்.இவரது மனைவி திலகம். இவர் சமையல் கான்ட்ராக்டர் பணி செய்கிறார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கணவர் மது குடித்துவிட்டு மனைவி மகள்களை தாக்கியதில் பிரச்னை ஏற்பட்டது. இதில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பின் மருதமூர்த்தி கம்பத்தில் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வாழ்ந்து வந்தார். விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பஸ்சில் வழிப்பறி: மோதிரம், பணம் பறிப்புதேனி:உத்தமபாளையம் நாராயணத்தேவன்பட்டி மாணிக்கம் 30. இவர் தேனியில் இருந்து சின்னமனுாருக்கு அரசு பஸ்சில் கடந்த ஜூலை 13ல் சென்றார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், மாணிக்கம் வைத்திருந்த பணப்பையை பறித்து பஸ்சில் இருந்து இறங்கினர். அதில் 4 கிராம் தங்கமோதிரம், ஏ.டி.எம்., கார்டு இருந்தது. பின் சிறுதி நேரத்தில் அந்த ஏ.டி.எம்., கார்டை பயன்படுத்தி, பழனிசெட்டிபட்டி எஸ்.பி.ஐ.,ஏ.டி.எம்., மையத்தில் ரூ.19 ஆயிரம் எடுத்துள்ளனர். இதுகுறித்து மாணிக்கத்தின் அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது. வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாணிக்கம் கோரி தேனி எஸ்.பி.,சிவபிரசாத் குறைதீர் நாளில் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.கல்லுாரி மாணவி மாயம்பெரியகுளம்: தனியார் கல்லூரியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி. கல்லூரி வகுப்பு இடைவெளியில் கல்லூரி வளாகத்தில் வங்கிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் கல்லூரிக்கு திரும்பவில்லை. முதல்வர் சேசுராணி புகாரில் தென்கரை போலீசார் தேடி வருகின்றனர்.மனைவி மாயம்: கணவர் புகார்தேவதானப்பட்டி: கெங்குவார்பட்டி ராமர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கதிரேசபாண்டி 37. ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா 20. இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் வீட்டிலிருந்த லாவண்யா காணாவில்லை என கதிரேசபாண்டி புகாரில் தேவதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.டூவீலர் மாயம்போடி: போடி, ரங்கநாதபுரம் அமராவதி நகரில் வசிப்பவர் கார்த்திகேயன் 51. தேவாரம் மெயின் ரோட்டில் காஸ் ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் ஏஜென்சி முன்பாக டூவீலரை நிறுத்தி விட்டு கோடவுனுக்கு சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது டூவீலர் காணவில்லை. கார்த்திகேயன் புகாரில் போடி தாலுகா போலீசார் காணாமல் போன டூவீலரை தேடி வருகின்றனர்.லாட்டரி விற்றவர் கைதுகடமலைக்குண்டு: கண்டமனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து எஸ்.ஐ., பாண்டியம்மாள் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். கோவிந்தநகரம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நின்றிருந்த குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆனந்தன் 51, என்பவரிடம் விசாரித்தனர். அவர் விற்பனைக்காக வைத்திருந்த கேரள லாட்டரி சீட்டுகள் 34யை கைபற்றி கைது செய்தனர். லாட்டரி சீட்டுகள் விற்ற பணம் ரூ.1360 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் காயம் தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி தெற்கு தெரு சந்தானக்குமார் 35. இவரது நண்பர்கள் சின்னத்துரை 34. பிச்சை 32.பிச்சை டூவீலரை ஓட்ட சந்தானக்குமார் நடுவிலும், அதன் பின் சின்னத்துரை உட்கார்ந்திருந்தார். பெரியகுளம் --வத்தலகுண்டு, தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் கடந்து செல்லும்போது அதே ரோட்டில் வத்தலக்குண்டிலிருந்து பெரியகுளம் நோக்கி சென்ற லாரி டூவீலரில் மோதியது. இதில் காயமடைந்த சந்தானக்குமார் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையிலும், சின்னத்துரை தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து ஏற்படுத்திய மதுரை பாலமேடைச் சேர்ந்த லாரி டிரைவர் டிக்சன்ராஜிடம் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.தந்தையை தாக்கிய மகன்மூணாறு: மூணாறு அருகே குண்டளை, சான்டோஸ் மலைவாழ் மக்கள் வசிக்கும் நகரில் வசிக்கும் தங்கவேலு 62, அவரது மகன் பிரசாத் ஆகியோருக்கு இடையே குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் இருந்த மரங்களை விற்றது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பிரசாத் கம்பியால் தந்தையை பலமாக தாக்கினார். அதில் தலையில் பலத்த காயம் அடைந்தவரை அருகில் வசிப்பவர்கள் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.