| ADDED : நவ 18, 2025 04:34 AM
அலுமினிய தகடுகள் திருட்டு தேனி: பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் மில் காவல் அதிகாரி சிவக்குமார் 57. மில் காவலர்கள் தங்கும் அறை சுவரில் பதித்திருந்த அலுமினிய தகடுகள், ஏ.சி., தகடுகள், 3 ஏ.சி., கம்பரசர் மோட்டர்கள் திருடு போயிருந்தன. சிவக்குமார் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். பெண் துாக்கிட்டு தற்கொலை சின்னமனுார்: கைலாசநாதர் தெரு ஜெயபால். இவரது மனைவி பாண்டியம்மாள். இத்தம்பதியின் மகள் வெண்ணிலா 26. இவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் சிவசக்தி நகரில் உள்ள தனது பெரிய மாமனார் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். சின்னமனுார் போலீசார் விசாரிக்கின்றனர். மாமியாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு பெரியகுளம்: கீழ வடகரை ஸ்டேட் பாங்க் காலனி ராஜேந்திரன் மனைவி கமலம் 60. இவரது மகள் சுபலட்சுமியை, சின்னமனுார் வ.உ.சி., தெரு அருண்பாண்டி திருமணம் செய்தார். சின்னமனுாரில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சுபலட்சுமி பெற்றோர் வீட்டுக்கு வந்தார். பெரியகுளத்திற்கு வந்த அருண்பாண்டியன் பிரச்னைக்கு காரணம் நீங்கள் தான் என, மாமியார் கமலத்தை தாக்கினார். கமலம் புகாரில் வடகரை போலீசார் அருண்பாண்டியன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். புகையிலை பதுக்கியவர் கைது போடி: தியாகி விஸ்வநாதன் தெரு விஜய் 33. இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் விஜயை கைது செய்து, அவரிடம் இருந்த 20 புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.