உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

டூவீலர் திருட்டுதேனி: அல்லிநகரம் கக்கன்ஜிகாலனி ஆறுமுகம் 65. இவருடைய டூவீலரை பொம்மையகவுண்டன்பட்டி அரசு மதுக்கடை அருகில் நிறுத்தி இருந்தார். இவரிடம் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் கொடுக்க சில்லரை மாற்ற சென்றார். திரும்பி வந்து பார்த்த போது டூவீலர் திருடு போயிருந்தது. ஆறுமுகம் புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் பலிதேனி: தேவதானப்பட்டி 15வார்டு தெற்குதெரு ஜீவாராஜ் 31, இவரது மனைவி மோகனா 30. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் பிரசவத்திற்காக தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்தனர். மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை சேர்க்கப்பட்டு பெண்குழந்தை இறந்து பிறந்தது. . தொடர்ந்து தொடர்ந்து சிகிச்சை பலனின்றி மோகனாவும் இறந்தார். இச்சம்பவம் தொடர்பாக ஜீவராஜ் புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.கொலைமிரட்டல்: இருவர் மீது வழக்குதேனி: டொம்புச்சேரி சுந்தன், இவரது மனைவி ராஜாத்தி. இவர்களது மகன் பாண்டி மணி. ராஜாத்தியிடம் அதே ஊரைச் சேர்ந்த ஆங்கத்தேவர், அவரது மனைவி செல்வி கடைக்கு கோழிகள் வாங்க ரூ.10ஆயிரம் கடன் வாங்கினர். பணத்தை திருப்பி தராமல் இருந்தனர். இந்நிலையில் ராஜத்தி மருத்துவ செலவிற்காக பணத்தை திருப்பி கேட்டார். பணம் பெற்ற இருவரும் ராஜாத்தி அவரது கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பாண்டிமணி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.கார் கவிழ்ந்து சிறுமி காயம்மூணாறு: கேரளா, மலப்புரத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் நேற்று மூணாறுக்கு காரில் சுற்றுலா வந்தனர். அவர்கள் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவாசல் எஸ்டேட்டை நோக்கி சென்றபோது அப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் தேயிலை தோட்டத்தினுள் கவிழ்ந்தது. அதில் மூன்றரை வயது சிறுமி பாத்திமா பலத்த காயம் அடைந்தார். அவரை கோலஞ்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எஞ்சியவர்கள் சிறிய காயங்களுடன் தப்பினர். மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.மது விற்பனை: 49 பேர் கைதுதேனி: தைபூச விழா, குடியரசு தினவிழாவை முன்னிட்டு இரு நாட்கள் மது விற்பனை கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த இருநாட்களில் அனுமதியின்றி மது விற்ற 49 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 619 மது பாட்டில்கள், பணம் ரூ.20, 400 பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை