உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

மதுபாட்டில் பதுக்கியவர் கைது தேனி: கம்பம் வடக்கு எஸ்.ஐ., அரசு தலைமையிலான போலீசார் சினிமா தியேட்டர் அருகே ரோந்து சென்றனர். அப்போது கம்பம் குரங்குமாயன் தெரு சசிக்குமார் 37, ரூ.3640 மதிப்புள்ள 26 மதுபாட்டில்கள், ரூ.142 மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். வாலிபர் தற்கொலை தேனி: கே.ஆர்.ஆர்., நகர் 11வது தெரு சூரஜ்குமார் 27. இவர் தனது வீட்டு கடனை செலுத்த முடியாமல், குடும்ப சுமையால் விரக்தி அடைந்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர். வாகன மோதி மூதாட்டி பலி தேனி: பழனிசெட்டிபட்டி சுபாஷ்சந்திரபோஸ் தெரு மகாலட்சுமி 47. இவரது தாய் புஷ்பவள்ளியுடன் 70, வசித்து வருகிறார். செப்.10 ல் கடைக்கு சென்ற புஷ்பவள்ளி கம்பம் ரோட்டை கடந்து சென்றார். அப்போது வீரபாண்டி நோக்கி சென்ற மினி சரக்கு வாகனம் மோதியது. இதில் காயமடைந்த மூதாட்டி தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் அனுமதித்து உயிரிழந்தார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். கடன் விரக்தியில் தற்கொலை போடி: மீனாட்சிபுரம் காந்தி மெயின் ரோடு தயாளன் 50. இவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் விரக்தி அடைந்து, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மனைவி மஞ்சுளா வெளியே சென்றது. வீட்டின் கதவை உட்புறமாக பூட்டி, துாக்கிட்டு தற்கொலை செய்தார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை