உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஏழு கடன் செயலிகளை நீக்க போலீஸ் பரிந்துரை

ஏழு கடன் செயலிகளை நீக்க போலீஸ் பரிந்துரை

தேனி:'ஆன்லைன்' மூலம் கடன் வழங்கும் ஏழு செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்க சைபர் கிரைம் போலீசார் பரிந்துரைத்துள்ளனர். பொதுமக்கள் ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் மொபைல் போன் செயலிகளை பதிவிறக்கம் செய்து, ஆதார், வங்கி கணக்கு, பான் கார்டு, புகைப்படங்கள் பதிவேற்றம் செய்து கடன் பெறுகின்றனர். அவற்றை பயன்படுத்தி கடன் பெற்றவர் உறவினர்களின் மொபைல் போன் எண்களுக்கு, கடன் வாங்கியவரின் போட்டோவை மார்பிங் செய்து, ஆபாச புகைப்படங்களுடன் இணைத்து உறவினர்களின் எண்கள், மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி விடுகின்றனர். இந்த விபரங்களை அறிந்த உறவினர்கள், கடன் பெற்றவரை தொடர்பு கொண்டு கேட்கும் போது, மன உளைச்சலுக்கு ஆளாகி அதை நீக்குவதற்காக கடன் வழங்கிய நிறுவனங்களை தொடர்பு கொள்கின்றனர். அப்போது, கடன் வழங்கிய தொகையை காட்டிலும் கூடுதல் பணம் கேட்டு மிரட்டி மோசடி செய்கின்றனர். இம்மாதிரியான மோசடிகளில் தேனி மாவட்டத்தில், இந்தாண்டு ஜன., 1 முதல் தற்போது வரை 168 பேர் பாதிக்கப்பட்டு, புகார் அளித்துள்ளனர். இதை விசாரித்து வரும் தேனி சைபர் கிரைம் போலீசார், கேஸ் ரூபி, கிரெடிட் கிஷாப், குயிக் கேஸ், குயிக் கிரெடிட், ரூபி ப்ரி, ரூபி பார்ட்னர், கிளியர் கிரெடிட், கிரெடிட் கேஸ் உள்ளிட்ட கடன் வழங்கும் நிறுவனங்களின் ஏ.பி.கே., அப்ளிகேஷன் செயலிகளை, பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்ய பரிந்துரைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை