உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கொச்சி - தனுஷ்கோடி சாலையில் பணிகளை நிறுத்த போலீஸ் பரிந்துரை

கொச்சி - தனுஷ்கோடி சாலையில் பணிகளை நிறுத்த போலீஸ் பரிந்துரை

மூணாறு: கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு முதல் வாளரா வரை ரோடு அகலப்படுத்தும் பணியினை ஓணப் பண்டிகை விடுமுறையின்போது நிறுத்தி வைக்குமாறு போலீசார் கடிதம் கொடுத்தனர். கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு - கொச்சி இடையே 126 கி.மீ., தூரம் ரூ.1250 கோடி செலவில் ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மூணாறு முதல் நேரியமங்கலம் வரை மலையோரப் பகுதி என்பதால் பணிகள் இடையே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த வாரம் சுதந்திர தினம், வார விடுமுறை ஆகிய தொடர் விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியால், மூணாறு முதல் அடிமாலி அருகில் உள்ள வாளரா வரையில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு நான்கு மணி நேரம் வரை பயணிகள் காத்திருக்க நேரிட்டது. அதனை கருத்தில் கொண்டு ஓணப் பண்டிகை விடுமுறையின்போது பத்து நாட்களுக்கு கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு முதல் வாளரா வரை ரோடு அகலப்படுத்தும் பணியை நிறுத்தி வைக்குமாறு மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி, இடுக்கி எஸ்.பி.சாபுமாத்யூவிடம் கடிதம் கொடுத்தார். அவர், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பரிந்துரைக்கஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை