உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தென்னை மரம் வெட்டி சேதம் போலீஸ் வழக்குப்பதிவு

தென்னை மரம் வெட்டி சேதம் போலீஸ் வழக்குப்பதிவு

கடமலைக்குண்டு: கடமலைக்குண்டு அருகே வனத்தாய்புரத்தைச் சேர்ந்தவர் செல்வம் 29, வனத்தாய்புரம் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் தனது அனுபவ பாத்தியத்தில் உள்ள நிலத்தில் தென்னை, இலவம் மரங்கள் வளர்த்து பராமரித்து வருகிறார். அப்பகுதியைச் சேர்ந்த அமுதா, செல்வம், செந்தில், ஆசை, ரவி, மலைச்சாமி ஆகியோர் செல்வம் பராமரித்து வரும் நிலத்தில் அத்துமீறி நுழைந்து மரங்களை வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து கேட்டதற்கு உன்னுடைய நிலம் இல்லை என்றும் புறம்போக்கு நிலம் தான் என்று கூறி தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். செல்வம் புகாரில் கடமலைக்குண்டு எஸ்.ஐ.ரங்கராஜ் மரங்களை சேதப்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை