பொங்கல் கொண்டாட்டம்
தேனி; மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள், தெருக்களில் விளையாட்டுப் போட்டிகள் என கொண்டாட்டம் களைகட்டியது.தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி நகர் பகுதியில் பெத்தாட்சி விநாயகர் கோயில், என்.ஆர்.டி.,நகர் சிவ கணேச கந்த பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வீடுகளில் பொங்கல் வைத்து, பூஜைகள் செய்து வழிபட்டனர். நகரின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் சார்பில் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், பெண்களுக்கான கோலப் போட்டிகள் உள்ளிட்டவை நடந்தன.