தேனி : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளில் பொங்கல் கொண்டாடம் களைகட்டியது. கல்வி நிறுவனங்களில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். கல்லுாரி செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன், இணைச் செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் பேசினார். உறவின்முறை துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். விழா ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் மாதவன், சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் கார்த்திகேயன் செய்திருந்தனர்.தேனி மதுரை ரோடு பொதுத்துறை வங்கியான கனரா வங்கி ஊழியர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மண்டல உதவி பொது மேலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். நிகழ்வில் கேரளா, ஆந்திரா, பிஹார் மாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் பங்கேற்று, பொங்கல் வைத்து பொது மக்களுக்கு வழங்கினர். கிளை மேலாளர்கள், ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர்.தேனி பெரியகுளம் ரோட்டில் அமைந்துள்ள லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளியில் நடந்த பொங்கல் விழா, விவேகானந்தர் பிறந்தநாள் விழாவில் பள்ளி தாளாளர் நாராயணபிரபு தலைமை வகித்தார். மதுரை கோட்ட சக்தி சங்கமம் ஒருங்கிணைப்பாளர் உமாராணி முன்னிலை வகித்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை தலைமையாசிரியர், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த பொங்கல் விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரிச் செயலாளர் காசிபிரபு, இணைச் செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லுாரி முதல்வர் சித்ரா பேசினர். மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை துணை முதல்வர்கள் கோமதி, சுசீலா, சரண்யா, உமாகாந்தி, கிருஷ்ணவேணி செய்திருந்தனர். தேக்கம்பட்டி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் மோகன் தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.